Google Family Link

4.5
4.6மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google Family Link என்பது பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் உங்கள் குடும்பத்தை ஆன்லைனில் பாதுகாக்க உதவும் ஆப்ஸாகும். ஒவ்வொரு குடும்பத்தின் தொழில்நுட்ப உபயோகமும் தனித்துவமானது. எனவே குடும்பத்திற்கேற்ற சரியான சமநிலையைத் தேர்வுசெய்யவும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை உருவாக்கவும் இந்த ஆப்ஸை வடிவமைத்துள்ளோம். இதன் மூலம், உங்கள் பிள்ளையின் சாதனப் பயன்பாடு மற்றும் சாதன இருப்பிடத்தைப் பார்ப்பது, தனியுரிமை அமைப்புகளை நிர்வகிப்பது போன்ற பலவற்றைச் செய்யலாம்.

Family Link மூலம் செய்யக்கூடியவை:

அடிப்படை டிஜிட்டல் விதிமுறைகளை உருவாக்குதல்
• திரை நேர வரம்புகளை அமைக்கலாம் — பிள்ளைக்கு ஏற்ற திரை நேரத்தை முடிவு செய்யலாம். பள்ளி நேரம் & ஓய்வுநேர அட்டவணைகள் மூலம் பிள்ளையின் சாதனத்தில் தினசரி நேர வரம்புகளை அமைத்து சிறந்த சமநிலையை உருவாக்க Family Link உதவும்.
• பிள்ளையின் ஆப்ஸை நிர்வகிக்கலாம் — பிள்ளையின் விருப்பத்திற்கேற்ப ஆப்ஸை உபயோகிக்க அனுமதிக்கலாம். ஒவ்வொரு ஆப்ஸிற்கும் தனித்தனி நேர வரம்புகளையும் கல்விசார்ந்த/வழக்கமான ஆப்ஸிற்கு வரம்பற்ற நேரத்தையும் அமைக்கலாம். ஆப்ஸைத் தடுக்கவும் செய்யலாம்.

உள்ளடக்க ஃபில்டர்கள், பாதுகாப்பு & தனியுரிமை ஆகியவற்றை நிர்வகித்தல்
• ஆன்லைனில் பிள்ளை பார்ப்பவற்றை நிர்வகிக்கலாம் — Chrome, Google Play, YouTube, Search போன்ற Google சேவைகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். பொருத்தமற்ற தளங்களைத் தடுக்க, புதிய ஆப்ஸிற்கு அனுமதி கேட்கும்படி அமைக்க, ஆப்ஸ் & இணையதளங்களுக்கான அனுமதிகளை நிர்வகிக்க, மேலும் பலவற்றைச் செய்ய Family Link உதவும்.
• அவரின் கணக்கைப் பாதுகாக்கலாம் — Family Link மூலம் பிள்ளையின் கணக்கையும் தரவு அமைப்புகளையும் நிர்வகிக்கலாம். பெற்றோர் என்ற முறையில், பிள்ளை தனது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அதை மாற்ற/ரீசெட் செய்ய உதவலாம், அவரது தனிப்பட்ட தகவலைத் திருத்தலாம், தேவையெனில் கணக்கையே நீக்கலாம்.*

*பொருத்தமான வயதுடைய பிள்ளைகள், கணக்கைத் தாங்களே நிர்வகிக்கலாம்.

எங்கிருந்தும் தொடர்பில் இருக்கலாம்
• பிள்ளையின் இருப்பிடத்தை அறியலாம் — பிள்ளை எங்கு சென்றாலும் கண்டுபிடிக்க இது உதவும். சாதனம் அவரிடம் இருக்கும் வரை Family Link மூலம் அவர் இருக்கும் இடத்தை வரைபடத்தில் பார்க்கலாம்.
• அறிவிப்புகளையும் விழிப்பூட்டல்களையும் பெறலாம் — குறிப்பிட்ட இடத்திற்குப் பிள்ளை வரும் நேரம், அங்கிருந்து செல்லும் நேரம் போன்ற அதிமுக்கிய அறிவிப்புகளை Family Link வழங்கும். பிள்ளையின் சாதனங்களை ஒலிக்கச்செய்யலாம், சாதனத்தின் பேட்டரி ஆயுளைப் பார்க்கலாம்.


முக்கியத் தகவல்

•சாதனத்தைப் பொறுத்து Family Link அம்சங்கள் மாறுபடும். இணக்கமான சாதனங்களை https://families.google/familylink/device-compatibility/ பக்கத்தில் பாருங்கள்
• Google Playயில் உங்கள் பிள்ளை வாங்குவதையும் பதிவிறக்குவதையும் நிர்வகிக்க Family Link உதவும். ஆனால் ஆப்ஸ் புதுப்பிப்புகள் (கூடுதல் அனுமதிகள் தேவைப்படுபவை உட்பட), முன்பு அனுமதித்த ஆப்ஸ், குடும்ப லைப்ரரியில் பகிர்ந்த ஆப்ஸ் ஆகியவற்றை நிறுவ உங்கள் அனுமதி தேவையில்லை. பிள்ளை Google Playயின் பில்லிங் அமைப்பில் வாங்கினால் மட்டுமே பர்ச்சேஸ் அனுமதிகள் தேவை. பிற பில்லிங் அமைப்புகளில் வாங்கினால் தேவையில்லை. பிள்ளை நிறுவிய ஆப்ஸையும் அவற்றுக்கான அனுமதிகளையும் Family Linkகில் பெற்றோர் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
• கண்காணிக்கப்படும் சாதனத்தில் உள்ள ஆப்ஸைக் கவனமுடன் சரிபார்த்து, பிள்ளை பயன்படுத்தக்கூடாத ஆப்ஸை ஆஃப் செய்ய வேண்டும். குறிப்பு: Google Play, Google போன்ற முன் நிறுவப்பட்ட சில ஆப்ஸை உங்களால் ஆஃப் செய்ய முடியாமல் போகலாம்.
• பிள்ளை/டீன் ஏஜரின் சாதன இருப்பிடத்தை அறிய, அது ஆனில் இருப்பதுடன் டேட்டா/வைஃபை மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டு சமீபத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
• கண்காணிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே Family Link பெற்றோர் கட்டுப்பாடுகள் கிடைக்கும். கண்காணிக்கப்படும் Google கணக்குகளில் Search, Chrome, Gmail போன்ற Google தயாரிப்புகளைப் பிள்ளைகள் அணுகலாம். அடிப்படை டிஜிட்டல் விதிமுறைகளை அமைத்து பெற்றோர் அவர்களைக் கண்காணிக்கலாம்.
• பிள்ளையின் ஆன்லைன் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் Family Link உதவினாலும் பாதுகாப்பான இணையத்தைத் தராது. இணையத்தில் உள்ளவற்றை Family Link கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பிள்ளை சாதனத்தைப் பயன்படுத்தும் நேரத்தைத் தீர்மானிக்கவும் ஆன்லைனில் அவரைப் பாதுகாக்கவும் உதவும்.
புதுப்பிக்கப்பட்டது:
24 அக்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
4.53மி கருத்துகள்
Partha Sarathy
24 அக்டோபர், 2025
can't restrict youtube shorts brainrot
இது உதவிகரமாக இருந்ததா?
Google LLC
24 அக்டோபர், 2025
Hi Partha. Thanks for the suggestion. We love to hear how we can make Family Link even better for our users!
zhakaram 19
17 ஜூன், 2024
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 11 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ஸ்ரீநவலடி33 ஜி51மெயில் கா.வேல்முகன் உரிமையாளர் (51*ஜீவிதங்கள்)
3 ஜூன், 2024
சிறப்பு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 9 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

எளிதாக்கப்பட்ட புதிய டிசைனும் திரை நேரப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளன.